

ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் அவா அமைப்பு பாகிஸ்தானில் இனி தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இடப்பெற போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் மற்றும் ஐ. நா சபை தீர்மானத்தின்படி தடைச் செய்யப்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமால் உத் அவா தீவிரவாத அமைப்பும், அவரது தொண்டு நிறுவனமான பலாஹ் இ இன்சோனியத்தும் பாகிஸ்தான் அதிபர் உத்தரவின்படி இனி தடை செயப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சயீத் தொடுத்த மனுவை விசாரித்த, இஸ்லாமாபாத் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த அதிபர் பதவிகாலம் முடிந்து விட்டதால் அவர் நியமித்த அந்த தடை உத்தரவை நீடிக்க முடியாது என்று கூறியதாக பாகிஸ்தான்னின் பத்திரிகையான டான் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்றவை ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பு என்று ஏற்கெனவே பிரகடனம் செய்திருக்கின்றன. இதன் அடிப்படையில்தான் ஹபீச் சயீத்தின் இவ்வமைப்புகள் மீது தடை விதிக்கப்பட்டது.
இப்போது இம்ரான் கான் தலைமையில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு இதனை நீடிக்க போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.