Published : 17 Oct 2018 10:34 AM
Last Updated : 17 Oct 2018 10:34 AM

உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப்: ஒரு மணிநேரம் பரபரப்பு

யூடியூப் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர்கள் வேகமாக பணியாற்றி அதனை மீண்டும் செயல்பட வைத்தனர்.

யூடியூப் சர்வரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் யூடியூப் செயல்படாமல் அப்படியே முடங்கியது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பல கோடி யூடியூப் பயனாளர்கள் அதனை பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து யூடியூப் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் களத்தில் இறங்கினர். மிக வேகமாக பழுது நீக்கும் பணி நடந்தது. ஒரு மணிநேரத்தில் மீண்டும் யூடியூப் செயல்படத் தொடங்கியது. இதனை யூடியூப் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதில், நாங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கினோம். அனைவருக்கும் நன்றி. இதனால் யூடியூப் பயனாளர்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தடையில்லாமல் தொடர்ந்து சேவை வழங்க உறுதி பூண்டுள்ளோம்’’ எனக் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x