Last Updated : 29 Oct, 2018 12:33 PM

 

Published : 29 Oct 2018 12:33 PM
Last Updated : 29 Oct 2018 12:33 PM

இந்தோனேசிய விமான விபத்து: தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படை குவிப்பு; உதவி எண்கள் அறிவிப்பு

இந்தோனேசிய விமானம் 188 பயணிகளுடன் கடலில் விழுந்ததை அடுத்து, அந்நாட்டின் தேசிய தேடுதல் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய அதன் தலைவர் முகம்மது சுயாகி, ''கடலுக்குள் சுமார் 98 - 115 அடி (30 - 35 மீ.) ஆழத்தில் விமானம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேதமடைந்த பகுதியைக் கண்டுபிடிக்க நீர் மூழ்கி வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்'' என்று தெரிவித்தார்.

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பினாங்கு நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான் ஜேடி 610 என்ற விமானம் திங்கட்கிழமை காலை புறப்பட்டது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்தது.

விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணித்த நிலையில், வானில் பறந்த 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதைத் தொடர்ந்து விமானம் கடலில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தைக் கண்டறியும் முயற்சி நடைபெற்று வருகிறது.

ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு

விமான விபத்து தொடர்பாக உதவ ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பங்கல் பினாங்கு விமான நிலையத்திலும் ஜகார்த்தா சோக்கார்னோ ஹட்டா விமான நிலையத்திலும் அவசர கால மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவசர கால மையத்தைத் தொடர்பு கொள்ள : 021-80820000

பயணிகள் குறித்த விவரங்களுக்கு : 021-80820002

லயன் ஏர் நிறுவனத் தகவல் தொடர்புக்கு : +62 8788 033 3170

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x