

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியிலுள்ள லோகர் மாகாணத்தின் அகா மாவட்டத்தில் திருமண நிகழ்வின்போது குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில் மணமகன், மணமகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாகவும் தலைமைக் காவலர் ஷா பூர் அஹ்மத்சாய் தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.