Published : 05 Oct 2018 03:26 PM
Last Updated : 05 Oct 2018 03:26 PM

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு: டெனிஸ் முக்வேஜா, நாடியா முராத் வென்றனர்

2018 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில்  அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு இரு நபர்கள் பெறுகிறார்கள். காங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேஜாவும், இராக்கைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான  நாடியா முராத்தும் பெறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெனிஸ் முக்வேஜா (வயது 63) : காங்கோவைச் சேர்ந்த மருத்துவரான இவர் அந்நாட்டின் உள் நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வந்தவர்.மேலும் போரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பலருக்கு இலவசமாக மருத்து சேவை செய்து வந்தவர்.

நாடியா முராத் (வயது 25): இராக்கைச் சேர்ந்த இளம் குர்து மனித உரிமை ஆர்வலர். போரில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். குறிப்பாக அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள யாசிதி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து தீவிரமாக குரல் கொடுத்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x