Last Updated : 12 Oct, 2018 08:06 PM

 

Published : 12 Oct 2018 08:06 PM
Last Updated : 12 Oct 2018 08:06 PM

முறைகேடுகள், வாடிக்கையாளர்களிடம் மோசமான நடத்தை: 200 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி ஏ.என்.இசட் வங்கி அதிரடி

வங்கி முறைகேடுகள், வாடிக்கையாளர்களை சரியாக நடத்தாதது ஆகிய காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவின் டாப் பேங்க் ஆன ஏ.என்.இசட் வங்கி 200 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனை வங்கியின் சி.இ.ஓ ஷேய்ன் எலியட் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் டாப் 4 வங்கிகளில் ஏ.என்.இசட் வங்கியும் உள்ளது. இவர் ராயல் கமிஷனின் இடைக்கால அறிக்கையையொட்டி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் பேராசையினால் வாடிக்கையாளர்களை மோசமாக நடத்தியதாக விசாரணையில் அம்பலமானது.

கடந்த காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஊழியர்களின் செயல்பாடுகள் மீது வங்கி முன்பு போதிய கவனம் செலுத்தவில்லை என்று நாடாளுமன்றத்தில் எலியட் ஒப்புக் கொண்டார்.

அதாவது ‘அடிப்படை நேர்மை அளவுகோல்களை’ வங்கி ஊழியர்கள் கடைப்பிடிக்காமல், செய்யாத சேவைகளுக்காக சில வேளைகளில் இறந்து போனவர்களின் கணக்குகளிலும் கூட தேவையில்லாத கட்டணங்களை வசூலித்தது நடந்துள்ளது. மேலும் தகவல்களை திரிப்பது, வாடிக்கையாளர்களை பெருக்க பொய்த்தகவல்களை அளிப்பது, நலிவுற்ற வாடிக்கையாளர்களை பொய்கூறி அச்சுறுத்துவது ஆகியவை விசாரணையில் அம்பலமானது.

இது வெட்கக் கேடானது என்பதை ஒப்புக்கொண்ட எலியட், மூத்த அதிகாரிகளும் இதற்குக் காரணம் என்று சாடினார்.

மேலும் வங்கிகள், நிதிநிறுவனங்கள் இதில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கைகள் பாயவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x