

தைவானில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிலநடுக்க ஆய்வியல் மையம் தரப்பில், ”தைவானில் கிழக்குப் பகுதியிலுள்ள கடற்கரை நகரமான ஹோலைன்னில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகவும், இது 34 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட சக்தி வாய்ந்த அதிர்வுகள் தலைநகர் தைபே வரையும் உணரப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
ஆனால், தைவான் வானிலை மையம் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 6.0 என்று குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த் தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
தைவானில் கடந்த பிப்ரவரி மாதம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 17 பேர் பலியாகினர்.