Published : 10 Aug 2014 12:31 PM
Last Updated : 10 Aug 2014 12:31 PM

ஈரான் விமானம் விழுந்து 39 பயணிகள் பரிதாப பலி: இன்ஜின் பழுதடைந்ததால் விபத்து

ஈரான் தலைநகர் டெஹ்ரானில், பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 39 பேர் உயிரிழந்தனர்.

இவ்விமானத்தில் 40 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்கள் பயணித்ததாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் செபாஹன் விமான போக்குவரத்து நிறுவனத்துக்குச் சொந்தமானது. இவ்விமானத்தில் 52 பேர் பயணிக்கலாம். குறுகிய தொலைவு பயணிப்பதற்கான உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

டெஹ்ரானில் இருந்து கிழக்கு ஈரானில் உள்ள டாபஸ் நகருக்கு உள்ளூர் நேரப்படி காலை 9.18 மணிக்கு (இந்திய நேரம் காலை 10.20) இந்த விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே இன்ஜின் பழுதடைந்ததால், மெஹ்ராபாத் விமான நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இதில் 39 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. முன்னதாக, இவ்விபத்தில் 48 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஈரான் போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் அகமது மஜிதி, ‘39 பேர் உயிரிழந்துள்ள தாக’ அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

விபத்துள்ளான விமானம் தபான் ஏர்லைன் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்றும், செபாஹன் விமான நிறுவனத்துக்குச் சொந்த மானது என்றும் இருவேறு கருத்துகள் நிலவின. இறுதியில், செபாஹன் விமான நிறுவனத் துக்குச் சொந்தமானது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் விமான விபத்துகள்

கடைசியாக ஈரானில் ஏற்பட்ட விமான விபத்து 2011-ம் ஆண்டு நிகழ்ந்தது. வடமேற்கு ஈரானில் பனிப்புயல் காரணமாக அவரசமாகத் தரையிறங்கிய ஈரான் ஏர் நிறுவனத்தின் போயிங் 727 விமானம் நொறுங்கியதில் 77 பேர் பலியாகினர்.

2009-ம் ஆண்டு டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட ரஷ்ய தயாரிப்பு ஜெட் விமானம் தரையிலிருந்து எழும்பிய அடுத்த சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியதில் 168 பேர் பலியாயினர்.

2003-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரட்சிப் பாதுகாப்புப் படையினர் சென்ற விமானம் தென் கிழக்கு ஈரானில் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 302 பேர் பலியாயினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x