

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆடம்பர கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.
இதுகுறித்து நியூயார்க் போலீஸார் தரப்பில், "நியூயார்க்கின் ஷோகாரி நகரில் லிமோசின் ( நீண்ட வடிவிலான ஆடம்பர கார்) கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் பயணம் செய்த இளைஞர்கள் 18 பேரும், சாலையில் நடந்து சென்ற இரண்டு பேரும் பலியாகினர். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான விபத்து இதுவாகும். விபத்து எற்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளனர்.
காரில் பயணம் செய்தவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். எனினும் இதுகுறித்த உறுதியான தகவல் அமெரிக்க போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. கார் விபத்தில் 20 பேர் பலியானது நியூயார்க் மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.