

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சவுதி அரேபிய இளவரசரை தாக்கி 2 லட்சத்து 50 ஆயிரம் யூரோ (சுமார் ரூ. 20.35 கோடி) பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபிய தூதரகத்தில் இருந்து விமான நிலையத்துக்கு இளவரசர் காரில் சென்றார். அவருடன் பாதுகாப்பு கார்களும் சென்றன. அப்போது கொள்ளையர்கள் இளவரசரின் கார்கள் மீது துப்பாக்கியால் சுட்டு பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறித்துச் சென்றனர்.