Published : 23 Oct 2018 04:00 PM
Last Updated : 23 Oct 2018 04:00 PM

தங்கத்தை விடவும் விலை மதிப்புள்ள “இமயமலை வயாக்ரா” பருவநிலை மாற்றத்தால் அழியும் அபாயம்

தங்கத்தைக் காட்டிலும் விலை மதிப்புள்ளதாகவும், ஆசிய மண்டலத்தில் விளையும், “இமயமலை வயாக்ரா” என்றுஅழைக்கப்படும் காளான் வகை செடிக்கு பருவநிலை மாற்றத்தால் பெரும் ஆபத்து நேர்ந்துள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியா, நேபாளம், சீனா, திபெத் ஆகிய நாடுகளில் மட்டுமே கிடைக்கும், கேட்டர்பில்லர் ஃபங்கஸ்(cater pillar) குடும்பத்தைச் சேர்ந்தது “இமாலயன் வயக்ரா”. இதை “யர்ச்சகும்பா” என்று நேபாளம், திபெத்நாடுகளில் அழைக்கின்றனர். இதன் அறிவியல் பெயர் ஓபியோகார்டிசெப்ஸ் சினென்சிஸ் (Ophiocordyceps sinensis.) .

இந்த இமயமலை வயக்ரா என்று அழைக்கப்படும் யர்ச்ச கும்பாவின் பயன்பாடுகள் குறித்து அறிவியல் ரீதியாக இன்னும் நிரூபிக்கப்படாவிட்டாலும் கூட, இந்தச் சிறிய அளவிலான இந்த யர்ச்சகும்பாவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தேயிலையுடன் சேர்ந்து அருந்தினாலோ அல்லது சூப்பாகஅருந்தும்போது, ஆண் மலட்டுத்தன்மை முதல் புற்றுநோய் முதல் குணமாகும் என்று நம்பப்படுகிறது.

இந்த யர்ச்சகும்பா திபெத், சீனா, நேபாளம், இந்தியாவில் மிக அதிகமான விலை கொடுக்கப்படுகிறது. அதாவது தங்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு விலை இந்த இமயமலை வயக்ராவுக்கு வழங்கப்படுகிறது. அதிலும் சீனாவில் 10 கிராம் யர்ச்சகும்பாவுக்கு ஏறக்குறைய இந்திய மதிப்பில் ரூ.90 ஆயிரம் வரை விலை தரப்படுகிறது.

இமயமலைப்பகுதியில், ஏறக்குறையக் கடல்மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயர மலைப்பகுதியில் உறைநிலையில் மைனல் 3 டிகிரி குளிரில்தான் இந்த யர்ச்சகும்பா விளையும்.

இந்த யர்ச்சகும்பாவை நேபாளம், திபெத், சீனாவில் உள்ள மக்கள் மிகவும் கவனத்துடன் பயிரிட்டுவருகின்றனர். ஆனால், பருவநிலை மாற்றத்தால் இந்த இமயமலை வயாக்ரா தற்போது அழிவை நோக்கிச்சென்று வருகிறது என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் “நேஷனல் அகாடெமி ஆப் சயின்ஸ்” வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் இது கூறப்பட்டு இருக்கிறது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராரிசிரியர் ஹோப்பிங்தலைமையில் ஆய்வாளர்கள் குழு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

உலகிலேயே மிகவும் விலைமதிப்புள்ள உயிரிமருத்துவப் பொருளாகக் கருதப்படும் யர்ச்சகும்பா, பலநூறுபேருக்கு மிகுந்த வருமானம் தரும் பொருளாக இருந்து வருகிறது. தங்கத்தைக் காட்டிலும் விலை மதிப்புள்ளதாகக் கருதப்படுவதால், இந்த யர்ச்சகும்பாவை பலர்ஆர்வத்துடன் பயிரிட்டு வருகிறார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இமயமலை வயாக்ரா என்றுஅழைக்கப்படும் யர்ச்சகும்பா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பூகோளவியல் காரணிகளும், சுற்றுச்சூழல் மாறுபாடும், காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமே.

யர்ச்சகும்பா என்ற பூஞ்சைக் காளான் விளைவதற்குச் சாதகமான காலநிலை என்பது மலைப்பகுதியில் மைனஸ் 3டிகிரிக்கும் குறைவானதாக இருக்க வேண்டும், மற்றும் சுற்றுச்சூழலும் அதற்கு உகந்ததாக இருத்தல் வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வெப்பநிலை உயர்வால் யர்ச்சகும்பாவிளைச்சலுக்கான சரியான காலநிலை இமயமலைப்பகுதியில் இல்லை. இதனால் யர்ச்சகும்பா விளைச்சல் கு றைந்துள்ளது.

இமயமலைப்பகுதியில் காலநிலை மாறிக்கொண்டு வருகிறது என்பது மனிதர்களுக்கான எச்சரிக்கையாகும். சிறிய குச்சிபோன்று கூம்பு வடிவத்தில் இருக்கும் யர்ச்சகும்பா கடல்மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள மலைகளில் மட்டுமே விளையக்கூடியது. ஆனால் தற்போது இமலைப்பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டுக்குப்பின் காலநிலையில் தொடர்ந்துமாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. வெப்பநிலையில் படிப்படியாக உயர்ந்து வருவது ஆபத்து.

மேலும், இமயமலைப்பகுதியில் வசிக்கும் மக்களும் இந்த யர்ச்கும்பா பயிரிட்டு வருமானம் ஈட்டி வந்தனர். தற்போது யர்ச்சகும்பா விளைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அவர்களின் வாழ்வாதாரமும்கேள்விக்குறியாகி வருகிறது. இவர்கள் பிழைப்புக்காக வேறு வேலையைத் தேடிவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x