

நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது.
இந்த நிலநடுக்கம் குறித்து ஊடகங்கள் தரப்பில், ”நியூசிலாந்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் வடகிழக்குப் பகுதியிலுள்ள தவ்மருனுயீ நகரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்க அதிர்வுகள் நியூசிலாந்தின் பல இடங்களில் உணரப்பட்டன. இந்த அதிர்வுகள் சுமார் 30 நொடிகள் நீடித்தன. சுனாமி எச்சரிக்கை ஏதும் கொடுக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குலுங்கிய நாடாளுமன்றம்
நிலநடுக்கத்தின்போது நியூசிலாந்து நாடாளுமன்றக் கட்டிடம் குலுங்கியது. இதனால் சபாநாயகர் நாடளுமன்றக் கூட்டத்தை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.