ஆப்கனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 25 பேர் பலி

ஆப்கனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 25 பேர் பலி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தலைமை ராணுவத் தளபதி உட்பட 25 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கன் ராணுவம் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் ஃபராஹ் மாகாணத்திலிருந்து இன்று (புதன்கிழமை) புறப்பட்ட இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்களில் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த தலைமை ராணுவத் தளப்தி உட்பட 25 பேர் பலியாகினர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில்தான் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது. ஃபராஹ் மாகாணத்தில் கடந்த மே மாதம் முதல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்று அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்தத் தாக்குதல் குறித்தும் தலிபான்கள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

தலிபான்கள் ஆதிக்கம்

2001-ல் ஆப்கனில் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு தலிபான்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்துள்ளது இதுவே முதல் முறை.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலிபான் அமைப்பைப் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக் காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in