Last Updated : 30 Aug, 2018 01:36 PM

 

Published : 30 Aug 2018 01:36 PM
Last Updated : 30 Aug 2018 01:36 PM

ஆடுகளால் உங்கள் முகத்தைப் படிக்க முடியும்

சிரிக்கும் மனித முகங்களையும் கோப முகங்களையும் ஆடுகளால் வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்கிறது ஓர் ஆய்வு. மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்களின் படங்களை ஆடுகள் ஆர்வத்துடன் தேடும் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய மற்றும் பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவு பின்வருமாறு:

''இந்த ஆய்வுக்கு 20 வளர்ப்பு ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றிடம் ஒரே மனிதரின் மகிழ்ச்சியான முகம் கொண்ட புகைப்படமும் கோபமான புகைப்படமும் காட்டப்பட்டன. 20 ஆடுகளுமே புன்னகை நிறைந்த முகத்தையே அணுக விரும்பின. தங்கள் மோவாயால் தொட்டன.

ஆடுகள் அனைத்தும் மகிழ்ச்சியான முகத்தைப் பார்க்கவும் அணுகவும் சராசரியாக 1.4 விநாடிகளை எடுத்துக்கொண்டன. கோபமான முகத்துக்கு 0.9 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொண்டன.

அதாவது ஆடுகள் கோபமான முகத்தை விட மகிழ்ச்சியான முகத்தைப் பார்ப்பதில், 50% அதிகமான நேரத்தைச் செலவழிக்கின்றன. இதன்மூலம் கால்நடை விலங்குகள் தங்கள் சூழலை விளக்கும் நவீன மனதைக் கொண்டிருக்கின்றன என்பது தெரியவருகிறது''.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் ராயல் சொஸைட்டி ஓப்பன் சைன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x