Last Updated : 29 Aug, 2018 12:42 PM

 

Published : 29 Aug 2018 12:42 PM
Last Updated : 29 Aug 2018 12:42 PM

விண்வெளியில் புற்றுநோய்க்கு சிகிச்சை: நாசாவின் ஆராய்ச்சியில் முன்னேற்றம்

புற்றுநோய் சிகிச்சைகள் கண்டுபிடிப்பதற்கான ஒரு தேடலில். சர்வதேச விண்வெளிகளில் ரத்த செல்களில் பரிசோதனைகளை நாசா நடத்தி வருகிறது. இதில் முன்பைவிட முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு  நிறுவனமான நாசா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் மைக்ரோஆக்டிவிடி சயின்ஸ் குளோவ்பாக்ஸ் விண்வெளி நிலையத்தில் இருந்தபடி விண்வெளி வீரர் செரீனா அவுன்-சான்ஸலர் ஆன்ஜிக்ஸ் புற்றுநோய் சிகிச்சை ஆய்வுக்காக ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுகின்றனர்.

ஆனோன் சான்செலர் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார். இரத்த நாளங்களின் மேற்பரப்புக்கு இட்டுச்செல்லும் உயிரணுக்கள் மீதான சோதனைகளை நடத்துவதற்காக அடுத்த சில மாதங்களும் அங்கேயே செலவிடுவார்.

நாசாவின் கூற்றுப்படி பூமியில் உள்ள ஒரு உயிரினத்தின் இரத்தத் திசுக்கள் எப்படி செயல்படுமோ அதைப்போலவே கலாச்சார உணவுகளில் உட்செலுத்தப்படும் நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன.

இதனால், சுழலும் செல்கள் பொதுவாக உடலில் இருந்துகொண்டு செயல்படுவது போலவே நடந்துகொள்கின்றன. புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் கீமோதெரபி சிகிச்சைக்கான செல்களை இன்னும் துல்லியமாக பரிசோதிக்க முடியும் என நாசா நம்புகிறது. இந்த சோதனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x