ஒசாமா... ஒபாமா...  குழப்பமடைந்த துருக்கி போட்டியாளர்

ஒசாமா... ஒபாமா...  குழப்பமடைந்த துருக்கி போட்டியாளர்
Updated on
1 min read

உங்களில் யார் அடுத்த கோடீஸ்வரர் நிகழ்ச்சி  நம் நாட்டில் மட்டுமல்ல ஐரோப்பியா, மத்திய கிழக்கு நாடுகளிலும் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று.

இத்தகைய நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகளும், அதற்கு பங்கேற்பாளர்கள் கூறும் பதிலும் சில  நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு நகைச்சுவையை அளிக்கும் வண்ணம் அமைந்துவிடும் அத்தகைய சம்பவம்தான் தற்போது துருக்கியில்  நடந்துள்ளது.

Who Wants To Be A Millionaire?  என்ற துருக்கி நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வுதான் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்பாளராக துருக்கி இயக்குநர் இவாவ் காஃப்மான் கலந்து கொண்டார்.

யாருடைய பெயர் ஒபாமா என்று முடிகிறது என்று நெறியாளர் கேள்வி கேட்க அதற்கு, இவான் கஃப்மான்  "பின்லேடன்... என்று கூறி சிறிது நேர இடைவெளிக்குப் பின்பாரக் ஒபாமா..." என்று கூறுவார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இதில் இவான் தனது ட்விட்டர் பக்கதில் பாரக் ஒபாமாவைப் பின் தொடர்கிறார் என்று குறிப்பிட்டு நெட்டிசன்கள் அவரை நகைச்சுவையாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து இவான் கூறும்போது,  "நான் சற்றும் யோசிக்காமல் அந்தப் பதிலை கூறினேன். திடீரென ஒருவர் ஒபாமா என்று கூறும்போது அனிச்சையாக பின்லேடன் என்று கூறிவிட்டேன். இதற்காக என்னை நானே மன்னிக்க மாட்டேன்” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in