Last Updated : 13 Aug, 2018 06:39 PM

 

Published : 13 Aug 2018 06:39 PM
Last Updated : 13 Aug 2018 06:39 PM

ஆப்கனில் தாலிபான்களின் கொலைவெறித் தாக்குதல்;120 பேர் பலி: அமெரிக்காவிலிருந்து ராணுவ ஆலோசகர்கள் வருகை

கஜினி மாகாணத்தின் தலைநகர் கஜினியைக் கைப்பற்றுவதற்கான அரசபடைகளுடன் 4 நாட்கள் நடந்த கடும் சண்டையில் தாலிபான்களால் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் 100 ஆப்கான் போலீஸார், ராணுவத்தினர் மற்றும் அப்பாவிப் பொதுமக்களில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் தரேக் ஷா பஹ்ரமி தெரிவித்தார்.

கடந்த வெள்ளியன்று கஜினியைக் குறிவைத்து தாலிபான்கள் போர் தொடுத்ததற்குப் பிறகே இது அதிகாரபூர்வ பலி எண்ணிக்கையாகும்.

தாலிபான்களின் தாக்குதலுக்கு முன்னால் அரசபடைகள் நிலைகுலைய நகரின் பல்வேறு பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றினர். காபூலிலிருந்து ஊடுருவி நடத்திய மிகப்பெரிய தாக்குதல் என்றே ஆப்கான் அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலிருந்து ஆப்கான் படைகளுக்கு ஆலோசனை வழங்க ராணுவ ஆலோசகர்கள் ஆப்கானுக்கு வருகை தந்துள்ளனர்.

2,70,000 மக்கள் தொகை கொண்ட கஜினி நகரின் வீழ்ச்சி தாலிபான்களுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. காபூலையும் தெற்கு மாகாணங்களையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை இப்போது தாலிபான்கள் வசம் உள்ளது.

இதனையடுத்து மேலும் 1000 பேர் கொண்ட படை கஜினிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தான், செச்சன், மற்றும் அராபியர்களும் தாலிபான் படைகளில் இருக்கின்றனர்.

நகரின் புறப்பகுதிகளில் இருக்கும் தொலைத் தொடர்புக் கோபுரங்களை தாலிபான்கள் தகர்த்து விட்டனர். இதனால் தரைவழி தொலைத் தொடர்பு அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் போர் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

அயல்நாட்டு போராளிகள்:

கஜினியில் தாலிபான்கள் படையில் பெரும்பாலும் செச்சன், பாகிஸ்தானியப் போராளிகள் உள்ளனர். கஜினி பகுதியின் போலீஸ் தலைமையான கலோனல் பாரெத் மஷால் கூறும்போது, தாலிபான்கள் அவர்கள் இலக்கை எட்ட முடியவில்லை என்றார். கிராமப்புறங்களை எளிதில் பிடித்து வைக்கும் தாலிபான்களால் நகர்ப்புறப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

கஜினியில் மாட்டியிருக்கும் குடிமக்கள் பற்றிய கவலைகளை ஐநா வெளியிட்டுள்ளது.

கஜினி போர்முனையில் இருப்பதால் அங்கு மருத்துவமனைகளில் மருந்துகள் காலியாகி வருகின்றன. மின்சாரம், குடிநீர், உணவு ஆகியவையும் குறைந்து வருகின்றன, உள்ளே இவை வருவதற்கும் வழியில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x