

அமெரிக்கர்கள் எங்கிருந்தாலும், அவர்களை நாங்கள் அழிப்போம், ரத்தத்தால் மூழ்கடிப்போம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்பினர், சிரியாவின் சில நகரங்களையும் இராக்கின் நகரங்களையும் இணைத்து 'இஸ்லாமிக் ஸ்டேட்' என்ற தனி நாடு அமைக்கும் திட்டத்தோடு, தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.
குர்திஷ் மற்றும் அமெரிக்க ராணுவப் படைகளின் உதவியோடு கடந்து இரண்டு வாரங்களாக, மொசூலில் வான்வழித் தாக்குதல் நடத்தி அந்நாட்டின் முக்கிய அணையை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி அமைப்பிடமிருந்து இராக் ராணுவம் மீட்டது. இதற்கிடையே குர்தீஷ்தான் தலைநகர் எர்பில் நோக்கி முன்னேறும் கிளர்ச்சியாளர்களைத் தாக்கி முன்னெடுத்து செல்லும்படி, இராக் மற்றும் குர்தீஷ்தான் மாகாண அரசுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தன.
இதனையடுத்து அமெரிக்கா தனது தாக்குதலை அங்கு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்கா இனியும் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால், அமெரிக்கர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை நாங்கள் தாக்குவோம். அவர்களை ரத்தத்தால் மூழ்க செய்வோம் என்று எச்சரிக்கை விடுக்கும்படியான வீடியோ ஒன்றை ஐஎஸ்.ஐஎஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.