Published : 04 Aug 2018 08:36 AM
Last Updated : 04 Aug 2018 08:36 AM

தங்கள் சார்பில் பிரதமரை தேர்ந்தெடுக்க முடிவு: எதிர்க்கட்சிகளால் இம்ரானுக்கு சிக்கல் 

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் சார்பில் பிரதமரை தேர்ந்தெடுக்க முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவெடுத் துள்ளன. இதனால் இம்ரான் கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 25-ம் தேதி நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி, முன்னாள் கிரிக் கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் ஆகிய கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. மேலும், முன்னாள் பிரதமர் மறைந்த பிரதமர் பெனசிர் புட்டோ மகன் பிலாவல் புட்டோவின் தலைமை யிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இவர்களுக்கு சவாலாக விளங்கியது. எனினும், தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

மொத்தம் உள்ள 272 இடங் களில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவா னது. இதையடுத்து சிறிய கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் வரும் 11-ம் தேதி இம்ரான் கான் பிரதமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், இஸ்லாமாபாத்தில் கடந்த வியாழக் கிழமை முக்கிய 2 எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சிறிய கட்சி களைச் சேர்ந்த தலைவர்கள் திடீரென சந்தித்து தீவிர ஆலோ சனை நடத்தினர். அப்போது தங்கள் சார்பில் பிரதமர் ஒருவரை தேர்ந்தெடுப்பது எனவும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தை அணுகுவது எனவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், எதிர்க்கட்சிகள் சார் பில் 16 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி வரைவுத் திட்டம் ஒன்றையும் தயாரித்துள்ளது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் ஷெர்ரி ரகுமான் இந்த வரைவுத் திட்டத்தைத் தயாரித் துள்ளார். அதில், நவாஸ் கட்சி சார்பில் ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுப்பது, பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் நாடாளுமன்ற சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பது, முத்தாஹிதா மஜ்லிஸ் இ அமால் சார்பில் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் முழு மனதாக ஒப்புக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் ஷெர்ரி ரகுமான் செய்தியாளர்ளிடம் கூறும்போது, ‘‘தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. நாங் கள் தேர்தல் முடிவை ஏற்கெனவே நிராகரித்து விட்டோம். ராணுவத் தின் பலத்தால் தேர்தல் முடிவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பொம்மை அரசாங்கம் அமை வதை நாங்கள் கடுமையாக எதிர்ப் போம். இதைக் கண்டித்து நாடாளு மன்றத்துக்குள்ளும் வெளியிலும் போராடுவோம்’’ என்றார். இம்ரான் கான் கட்சிக்கு முத்தாஹிதா குவாமி இயக்க கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால், அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்துள்ளதால் இம்ரான் கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், அவர் பிரதமராவதற்கு தேவையான எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x