Published : 10 Aug 2018 08:49 AM
Last Updated : 10 Aug 2018 08:49 AM

முன்னாள் உளவு அதிகாரி மீதான ரசாயன தாக்குதல்:ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை- அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை

பிரிட்டனில் தங்கியிருந்த ரஷ்ய முன்னாள் உளவு அதிகாரி மீது ரசாயன தாக்குதல் நடத்திய விவகாரத்தில் ரஷ்யா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “பிரிட்டன் குடி மகன் மற்றும் அவரது மகளை கொலை செய்யும் நோக்கத் துடன் ‘நோவிசோக்’ என்ற ரசாயனத் தைக் கொண்டு தாக்குதல் நடத்தியதற்காக, ரசாயன ஆயுத ஒழிப்பு (1991) சட்டத்தின் கீழ் ரஷ்யா மீது புதிதாக பொருளாதார தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கை காலமான 15 நாட்கள் கழித்து வரும் 22-ம் தேதி இது அமலுக்கு வரும்” என கூறப் பட்டுள்ளது.

இது முதல்கட்ட தடையாகும். இதன்படி ராணுவ பயன்பாட்டுக் காக பயன்படும் சில முக்கியமான பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும். இந்த விவகாரத்தில் ரஷ்யா உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், 2-ம் கட்டமாக மிகக் கடுமையான பொருளா தார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத் துள்ளது.

இதனிடையே, “இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ரஷ்யா தயாராக உள்ளது. இதைக் காரணம் காட்டி பொருளாதார தடை விதிப்பதை ஏற்க முடியாது” என அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரியான செர்கி ஸ்கிரிபால் பிரிட்டன் உளவுத் துறைக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவருக்கு ரஷ்யாவில் சிறை தண்டனை விதிக் கப்பட்டது. எனினும், பரஸ்பரம் உளவாளிகளை பரிமாறிக்கொள் ளும் உடன்படிக்கையின்படி விடு விக்கப்பட்ட ஸ்கிரிபால், பிரிட்ட னில் தஞ்சமடைந்தார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சாலிஸ்பரி நகர ஓட்டலில் தங்கியிருந்த ஸ்கிரிபால் அவரது மகள் யூலியா ஆகியோர் திடீரென நிலைகுலைந்தனர். அவர்களை பரிசோதித்ததில், ரஷ்ய ராணுவத் தில் பயன்படுத்தப்படும் ரசாயனம் மூலம் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் அந்த நாட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இந்தப் புகாரை ரஷ்யா மறுத்தது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x