மெக்சிகோவில் விமானம் விபத்து: உயிர் தப்பிய 101 பயணிகள்

மெக்சிகோவில் விமானம் விபத்து:  உயிர் தப்பிய 101 பயணிகள்
Updated on
1 min read

மெக்சிகோவில் பயணிகள் சென்ற விமானம்  விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 101 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து ஏபி வெளியிட்ட செய்தியில், "AM2431 என்ற எண் கொண்ட மெக்சிகோ விமானம் கவுடலுப் விக்டோரியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து மெக்சிகோ செல்லும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. மீட்புப் பணியினர் விரைவாக வந்து பயணிகளை மீட்டனர். இதில் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

விபத்தை தொடர்ந்து கவுடலுப் விக்டோரியா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

இதுகுறித்து மெக்சிகோ அரசு தரப்பில், "இந்த விமான விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. விமானத்தில் பயணம் செய்த 101 பயணிகளில் 85 பேர் காயமடைந்துள்ளனர்.  அவர்களில் இருவரது நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. விமானம் விபத்து குறித்து உரிய விசாரணை நடந்து வருகிறது" என்று கூறியுள்ளது.

மெக்சிகோ பிரதமர் எண்டிரிகுயு பினா தனது ட்விட்டர் பக்கத்தில், தேவையான உதவிகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in