

வட கொரியா - தென் கொரியா இடையேயான எல்லைப் பகுதி களில் உள்ள ராணுவ நிலைகளை மூடுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
இதுதொடர்பாக, தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சாங் - யூங் - மூ அந்நாட்டு நாடாளு மன்றத்தில் நேற்று கூறியதாவது:
வட கொரியா - தென் கொரியா இடையே நீண்டகாலமாக நிலவி வந்த கசப்புணர்வு தற்போது படிப் படியாக குறைந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே யான பிரச்சினைகள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டு வருகின்றன.
இரு நாட்டு அதிபர்களும் கடந்த ஏப்ரலில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அமைதி நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வட கொரியா - தென் கொரியா இடையேயான எல்லைப் பகுதிகளில் அமைந்தி ருக்கும் ராணுவ நிலைகளை மூடுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. அதன்படி, இந்த ராணுவ நிலைகள் பரஸ்பரம் படிப்படியாக வாபஸ் பெறப்படும்.
முதலில் ஒரு கி.மீ. தொலைவு வரை அமைந்திருக்கும் ராணுவ நிலைகள் மூடப்படும் என அவர் தெரிவித்தார்.
வடகொரியா, தென்கொரியா இடையே மூத்த ராணுவ தளபதிகள் நிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகி றது. அதன்படி அடுத்த மாதம் இருநாடுகளுக்கு இடையே புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத் தாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. - ஏஎப்பி