சார்லி கிக் கொலையாளிக்கு மரண தண்டனை கிட்டும்: ட்ரம்ப் நம்பிக்கை

சார்லி கிக் கொலையாளிக்கு மரண தண்டனை கிட்டும்: ட்ரம்ப் நம்பிக்கை
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சார்லி கிக்கை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்​தலின்​போது குடியரசு கட்​சிக்கு ஆதர​வாக மிகத் தீவிர​மாக பிரச்​சா​ரம் செய்​தவர் சார்லி கிர்க். கடந்த 10-ம் தேதி அமெரிக்​கா​வின் யூட்டா மாகாணம், ஓரமில் உள்ள யூட்டா பள்​ளத்​தாக்கு பல்​கலைக்​கழக வளாகத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் சார்லி கிக் பங்​கேற்ற​போது மர்ம நபர் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் அவர் உயி​ரிழந்​தார்.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ட்ரம்ப், "சார்லி கிக்கை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சார்லி கிக்குக்கு நெருக்கமானவராக இருந்தவரே, அவரை கொலை செய்துள்ளார். அவர்தான் குற்றவாளி என்பது நிரூபணமாகும் என்று நம்புகிறேன். அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்றும் நம்புகிறேன். சார்லி கிக் மிகச் சிறந்த நபர். அவருக்கு இவ்வாறு நேர்ந்திருக்கக் கூடாது. அவர் மிகவும் கடினமாக உழைத்தார். எல்லோரும் அவரை விரும்பினார்கள். அவர் எனது மகனைப் போன்றவர்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சார்லி கிக்கின் கொலை குறித்து ட்ரம்ப் வெளி​யிட்ட பதி​வில், "சார்லி கிக்​கின் படு​கொலையை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறேன். கடந்த ஆண்டு தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது என் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்​தப்​பட்​டது. அதிர்​ஷ்ட வச​மாக உயிர் தப்​பினேன். இடது​சாரி அரசி​யல் வன்முறை​ அதி​கரித்து வரு​கின்​றன. இந்த வன்​முறை​யால் அப்​பாவி பொது​மக்​கள் உயி​ரிழந்து வரு​கின்​றனர். இதை தடுத்து நிறுத்த வேண்​டும். அமெரிக்க நீதிப​தி​கள், பாது​காப்​புத் துறை அதி​காரி​கள் மற்​றும் வலது​சாரி சிந்​தனை கொண்​ட​வர்​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரு​கிறது. வன்​முறை​களில் ஈடு​படுவோர் மீது மிகக் கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும்" என தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in