காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? - ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்

காரில் பிரதமர் மோடியுடன் பேசியது என்ன? - ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
Updated on
1 min read

மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்​சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.

சீனா​வின் தியான்​ஜின் நகரில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) 2 நாள் உச்சி மாநாடு செப். 31 மற்றும் ஆக.1 இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பின் கலந்து கொண்ட்னர். இந்த மாநாடு நிறைவடைந்த நிலை​யில், இந்​தியா - ரஷ்யா இடையே இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடத்து​வதற்​காக பிரதமர் மோடி​யும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்​டம் நடை​பெறும் அரங்​குக்கு சென்​றனர். இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. காருக்குள் இருவரும் என்ன பேசினார்கள் என்ற விவாதம் நடைபெற்று வந்தது.

காரணம் பிரதமர் மோடிக்காக 15 நிமிடங்கள் காத்திருந்து ரஷ்ய அதிபர் புதின் தனது காரில் அழைத்துச் சென்றார். கூட்டம் நடைபெறும் இடத்தை அடைவதற்கான பயணம் 15 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அவர்கள் தங்கள் உரையாடலைத் தொடர காரில் கூடுதலாக 45 நிமிடங்கள் செலவிட்டனர்.

இந்த நிலையில் சீனாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காருக்குள் மோடியுடன் பேசியது என்ன என்பது குறித்த கேள்வி புதினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதில் ரகசியம் எதுவும் இல்லை. நாங்கள் அலாஸ்காவில் என்ன பேசினோம் என்பதை அவரிடம் (மோடியிடம்) கூறினேன்” என்று தெரிவித்தார்.

கடந்த ஆக.15 அன்று அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது அமெரிக்க - ரஷ்ய உறவு, உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in