ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள், டெலிகிராம் இணைப்பை வெளியிட்டது தூதரகம்

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள், டெலிகிராம் இணைப்பை வெளியிட்டது தூதரகம்
Updated on
1 min read

தெஹ்ரான்: போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கான உதவி எண்களை வெளியிட்டுள்ளது. மேலும், தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள டெலிகிராம் இணைப்பு ஒன்றையும் தூதரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தூதரகத்திலிருந்து நிலைமை குறித்த அண்மையத் தகவல்களைப் பெற ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் இணைப்பில் சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த டெலிகிராம் இணைப்பு தற்போது ஈரானில் உள்ள இந்திய குடிமக்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்க. https://t.me/indiansiniran” என்று தெரிவித்தது.

மேலும், “தயவுசெய்து பின்வரும் இணைப்பில் உங்கள் விவரங்களை வழங்கவும்: https://forms.gle/cCLrLyzFkS2AZYEM8... 2. பீதி அடையாமல் இருப்பது, உரிய எச்சரிக்கையுடன் செயல்படுவது மற்றும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பது முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளது.

ஈரானில் தேவையற்ற பயணங்களை தவிர்க்க இந்தியர்களை கேட்டுக்கொண்டுள்ள தூதரகம், தகவல் தொடர்புக்காக பல தொடர்பு எண்களையும் வெளியிட்டுள்ளது.

தொடர்பு எண்கள்: அழைப்பிற்கு மட்டும்: +98 9128109115, +98 9128109109

வாட்ஸ்அப்பிற்கு: +98 901044557, +98 9015993320, +91 8086871709.

பந்தர் அப்பாஸ் (துறைமுக நகரம்): +98 9177699036 4. ஜஹேடன்: +98 9396356649

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் “ஆபரேஷன் ரைசிங் லயன்" நடவடிக்கை மூலம் ஈரானின் ராணுவ மற்றும் அணு ஆயுத தளங்கள் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், இஸ்ரேலிய நகரங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. இரு தரப்பிலும் நாளுக்கு நாள் பதற்றம் அதிகமாகி வரும் நிலையில் இந்திய தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

We request everyone in Iran to join the below given Telegram Link to receive updates on the situation from the Embassy. Kindly note that this Telegram Link is ONLY for those Indian Nationals who are currently in Iran.https://t.co/6rLuloaEYO

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in