‘அமெரிக்காவின் முழு பலத்தையும் உங்கள் மீது இறக்குவோம்’ - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
Updated on
1 min read

நியூயார்க்: “ஈரான் எந்த வகையிலும் அல்லது வடிவத்திலும் நம்மைத் தாக்கினால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் அவர்கள் மீது இறங்கும்.” என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, இஸ்ரேலின் ராணுவம் தெஹ்ரானில் உள்ள ஈரானிய பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தைத் தாக்கியதாக அறிவித்தது. மேலும், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய தெஹ்ரானை சுற்றியுள்ள பல இடங்களைத் தாக்கியதாகவும் அது கூறியது.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், “ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவிற்கு எந்த தொடர்பும் இல்லை. ஈரான் எந்த வகையிலும் அல்லது வடிவத்திலும் நம்மைத் தாக்கினால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் அவர்கள் மீது இறங்கும்.

இருப்பினும், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை நாம் எளிதாகச் செய்து, இந்த ரத்தக்களரி மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.” என்று அவர் கூறினார்.

ஈரானின் இஸ்ஃபஹானில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட மையங்களில் ஒன்று இஸ்ரேலால் தாக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று இஸ்ஃபஹான் மாகாண ஆளுநர் அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் போலீஸார் இரண்டு உடல்களை மீட்டனர். ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் ஒரே இரவில் 10 பேர் பலியாகினர். அதே நேரத்தில் இந்த தாக்குதல்களால் 180 பேர் காயமடைந்தனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in