ஆப்பிள் கணினி வடிவமைப்பாளர் பில் அட்கின்சன் காலமானார்: டிம் குக் இரங்கல்

ஆப்பிள் கணினி வடிவமைப்பாளர் பில் அட்கின்சன் காலமானார்: டிம் குக் இரங்கல்
Updated on
1 min read

சான் பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனத்தின் கணினி வடிவமைப்பாளரான பில் அட்கின்சன் காலமானார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது மறைவை அவரின் குடும்ப உறுப்பினர் உறுதி செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை அன்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார்.

“பில் அட்கின்சனின் மறைவால் நாங்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளோம். அவர் ஓர் உண்மையான தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். அவரது படைப்பாற்றல் என்றென்றும் போற்றப்படும். அவர் மேற்கொண்ட பணிகள் நம்மை ஊக்குவிக்கும்” என எக்ஸ் தளத்தில் டிம் குக் ட்வீட் செய்துள்ளார்.

யார் இந்த பில் அட்கின்சன்? - வாஷிங்டன்னில் பிறந்தவர் பில் அட்கின்சன். கணினி அறிவியல் மற்றும் நியூரோ பயாலஜியில் பட்டம் பெற்றுள்ளார். ஆப்பிள் நிறுவன கணினியின் வடிவமைப்பாளராக ‘குயிக் டிரா’ என்ற மென்பொருளை வடிவமைத்தவர். லிசா மற்றும் மேகிண்டோஷ் கணினிகளில் இது அடிப்படை மென்பொருளாக பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயனர்களுக்கு கிராஃபிகல் (Graphical) பயனர் அனுபவத்தை வழங்கியது. இதோடு ‘புல் டவுன்’ மெனுக்கள், ஃபைல்களை ஓபன் செய்ய ‘டபுள் கிளிக்’ அம்சம் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்ததும் இவர் தான். ‘மேக் பெயிண்ட்’ என்ற மென்பொருளையும் வடிவமைத்தவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in