

புவி வெப்பமயமாதலால் சுற்றுச் சூழலுக்கும் மனித சுகாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், வெப்பத் தணிப்பு (குளிரூட்டல்) சாதனங்களை வாங்க வசதியில்லாமல் கஷ்டப்படும் அதிக மக்கள் தொகை கொண்ட 9 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
ஐ.நா. சார்பில், ‘வெப்பத் தணிப்பு வாய்ப்புகள்: அனைவருக்கும் குளிரூட்டல் வசதி வழங்குதல்’ என்ற பெயரில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. புவி வெப்ப மயமாதலால் அதிகரிக்கும் பிரச் சினைகளை அளவிடவும் சர்வதேச வெப்பத் தணிப்பு சவாலை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் முதல் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. அதிக வெப்பம் நிலவும் 52 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளில் கூறியிருப்பதாவது:
புவி வெப்பமயமாதலால் சுற்றுச் சூழலுக்கும் மனித சுகாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏசி, ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்டவை சொகுசு சாதனங்கள் என்ற நிலையிலிருந்து அத்தி யாவசியமானவையாகிவிட்டன.
உலகம் முழுவதும் 110 கோடி மக்கள் இதுபோன்ற குளிரூட் டல் உபகரணங்களை வாங்க வசதியில்லாமல் அவதிப்படுகின்ற னர். குறிப்பாக, இந்தியா, வங்க தேசம், பிரேசில், பாகிஸ்தான், நைஜீரியா, இந்தோனேசியா, சீனா, மொசாம்பிக் மற்றும் சூடான் ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கிராமப்புறங்களில் வசிக்கும் 47 கோடி ஏழைகள் பாதுகாப்பான உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காமல் அவதிப் படுகின்றனர்.
குறிப்பாக, வறுமை காரணமாக வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஏ.சி., மற்றும் ரெப்ரிஜிரேட்டர்களை வாங்க வசதி இல்லாமல் பலர் உள்ளனர். இதனால் வெப்பத்தால் ஏற்படும் பல்வேறு நோய்களால் பாதிக் கப்படுகின்றனர். முக்கியமான தடுப்பு மருந்துகளைப் பாதுகாக்க முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். இது ஒருபுறம் இருக்க, உலகில் 100 கோடி மக்கள் இன்னமும் மின்சார வசதியே இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
எனவே, அரசுகள், தொழிலதிபர் கள், பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து, அனைவருக்கும் வெப்பத் தணிப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புவி வெப்பமயமாதல் காரணமாக வீட்டு பயன்பாட்டு சாதனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளை விக்காத, மின் சிக்கனத்தை தரக் கூடிய நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இத்தகைய சாதனங்களை தயாரிக்க உற்பத்தி யாளர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.