அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்ற வேண்டும்: செனட்டில் தீர்மானம் தாக்கல்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்ற வேண்டும்: செனட்டில் தீர்மானம் தாக்கல்
Updated on
1 min read

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் மார்க் வார்னர், ஜான் கோர்னி, டிம் கேய்ன், ஜிம் ரிஸ்ச் ஆகியோர் கட்சி வேறுபாடு இன்றி இந்த தீர்மானத்தை கொண்டு வந்தனர். அமெரிக்கா – இந்தியா இடையே ஸ்திரத்தன்மை, பொருளாதார மேம்பாடு ஜனநாயக நல்லுறவு ஆகியவை மேம்படுவது முக்கியமானது.

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் வகையில் சிறப்புத் தூதரை நியமிக்க வேண்டு மென்றும் அந்த தீர்மானம் ஒபாமா வின் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் புதிதாக அமைந் துள்ள அரசு காப்பீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பை அதிகரித்துள்ளது. இது அமெரிக்க இந்திய இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் அந்நாடு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை என்ற செனட்டர் வார்னர் சுட்டிக்காட்டி பேசினார்.

தீர்மானத்தை கொண்டு வந்த செனட்டர்கள் அனைவருமே இந்தியாவுடன் நல்லுறவை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in