அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சார்ந்த 9 பேர் பலி

அமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சார்ந்த 9 பேர் பலி
Updated on
1 min read

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் நடந்த படகு விபத்தில் 17 பேர் பலியாகினர். இதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து மிசோரி மாகாண ஆளுநர் கூறும்போது,"மிசோரி மாகாணத்தில் பிரான்சன் நகருக்கு அருகே  உள்ள ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் 31 பேர் படகில் சவாரி சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சுற்றுலாப் பயணிகளின் படகு கவிழ்ந்ததில் அப்படகில் பயணித்த 17 பேர் பலியாகினர். பலியானவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். படகில் பயணித்தவர்கள் பாதுகாப்பு உடை அணியாததே விபத்துக்குக் காரணம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படகு விபத்து குறித்து மிசோரி மாகாண போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

ட்ரம்ப் இரங்கல்

இந்தப் படகு விபத்து குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,  "மிசோரி படகு விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகப் பெரிய இழப்பு. கடவுள் உங்களோடு இருப்பாராக..." என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in