Published : 24 Aug 2014 12:50 PM
Last Updated : 24 Aug 2014 12:50 PM

18 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன்றது ஹமாஸ்: இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகம்

சிட்டி இஸ்ரேலுக்கு தகவல் அளித் ததான சந்தேகத்தின் பேரில் 18 பாலஸ்தீனர்களை ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக் கொன்றனர்.

காஸா நகரில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு மத்தியில் அந்த 18 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இஸ்ரேலுக்காக உளவு பார்ப்பவர்களுக்கு இதுபோன்ற தண்டனை அளிக்கப் படும் என்றும் ஹமாஸ் அமைப்பி னர் காஸாவில் வசிக்கும் பாலஸ் தீனர்களுக்கு எச்சரிக்கை விடுத் துள்ளனர். பாலஸ்தீன விடுதலைக் காக போராடி வருவதாகக் கூறும் ஹமாஸ் அமைப்பே பாலஸ்தீ னர்களை சுட்டுக் கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய கமாண்டர்கள் 3 பேர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். காஸாவில் அவர்கள் பதுங்கியிருந்த இடத்தை உள்ளூரில் உள்ள பாலஸ்தீனர்கள் தெரிவித்ததன் மூலமே இஸ்ரேல் மிகத் துல்லியமாக தாக்குதல் நடத்தி கமாண்டர்களை கொலை செய்தது என்ற சந்தேகம் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் 18 பாலஸ்தீனர்களை சுட்டுக் கொன் றுள்ளனர். வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடிந்ததும், 18 பேரும் மசூதி அருகே கைகளை கட்டியும், முகத்தை மூடியும் அழைத்து வரப்பட்டனர். கருப்பு உடை அணிந்து, முகத்தை மறைத்திருந்த ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களை இழுத்து வந்தனர். சுவரின் அருகே அவர்களை மண்டியிட்டு அமரச் செய்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். ஏராளமான பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் நடந்தது.

ஹமாஸ் தலைவர்களின் இருப்பிடம் பற்றி இஸ்ரேலுக்கு தகவல் கொடுப்பவர்களுக்கு இதுபோன்ற தண்டனை அளிக்கப்படும் என்று ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.

காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் அமைப் பினருக்கும், இஸ்ரேலுக்கும் நடத்து வரும் சண்டையில் இதுவரை 2100 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்க ளில் 500 பேர் சிறார்கள்.

ஹமாஸ் அமைப்பினர்தான் தொடர்ந்து தீவிரவாத செயல் களில் ஈடுபடுகின்றனர். அதற்கான பலனை அவர்கள் அனுபவிப்பார் கள் என்று இஸ்ரேல் பிரதமப் பெஞ்சமின் நெதன்யாகு கூறி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x