Published : 16 Apr 2025 09:18 AM
Last Updated : 16 Apr 2025 09:18 AM
2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா. விசா கெடுபிடிகளை தளர்த்தியதோடு, “மேலும் பல இந்திய நண்பர்களை சீனாவுக்கு வரவேற்கிறோம். பாதுகாப்பான, வெளிப்படையான, நேர்மையான, துடிப்புமிகு, நட்பான சீனாவை அனுபவியுங்கள்.” என்று இந்தியாவுக்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹோங் வரவேற்றுள்ளார்.
ட்ரம்ப் கெடுபிடியின் விளைவாக.. அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளி சீனா. அதுமட்டுமல்ல பொருளாதார போட்டியாளரும் கூட. இந்தச் சூழலில் தான் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் பரஸ்பர வரியை அறிவித்தார். அதற்கு சீனாவும் பதில் வரி விதிக்க மற்ற நாடுகளுக்கு சலுகை அறிவித்து 90 நாட்களுக்கு தற்காலிகமாக வரியை நிறுத்திவைத்த ட்ரம்ப், சீனாவுக்கு மட்டும் 145% வரியை விதித்துள்ளது. இருப்பினும் சற்றும் தளராத சீனா தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து வருகிறது.
மேலும், வளரும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவை வரி விதிப்பை இணைந்தே எதிர்கொள்ள வேண்டும் என்று இந்தியாவுக்கு சீனா அண்மையில் வேண்டுகோள் விடுத்தது. இந்தச் சூழலில் இந்தியாவுக்கான சீன தூதர் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தை வெளியிட்டு இந்தியாவுடனான நட்புறவை நிலைநாட்டும் வகையில் எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்புகளால் சீனா தனது பொருட்களுக்கான சந்தையாக இந்தியாவை அதிகமாக சார்ந்திருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூட கணித்தனர். இந்தச் சூழலில் சீனா இந்தியாவுடன் நட்புறவை அதிகரிக்க விருப்பம் காட்டுவது பல்வேறு வாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
விசாவில் என்னென்ன தளர்வுகள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT