Published : 11 Apr 2025 09:24 AM
Last Updated : 11 Apr 2025 09:24 AM

அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 6 பேர் பலி

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஹட்சன் ஆற்றின் மீது ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் உள்பட 6 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்த சுற்றுலா பயணிகள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இறந்தவர்கள் ஸ்பெயின் நாட்டின் சீமன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ அகஸ்டின் எஸ்கோபார், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை இன்னும் அரசு உறுதிப்படுத்தவில்லை.

ஹெலிகாப்டர் புறப்பட்ட 18 நிமிடங்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. அதிலிருந்தவர்கள் சுதந்திர தேவி சிலை உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் போது இந்த விபத்து நடந்துள்ளதாகவும், உயிரிழந்த 6 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x