

ஜப்பானில் கடந்த ஒரு வாரமாக வீசும் அனல் காற்றுக்கு இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். 22,647 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜப்பான் பேரிடர் மேலாண்மை தரப்பில், ”ஜப்பானில் கடந்த ஒரு வாரமாக வீசும் அனல் காற்றுக்கு இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். 22, 647 பேர் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
வனவிலங்கு சரணலாயங்களிலும் அனல்காற்று காரணமாக விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை குளிர்ச்சியாக உணரவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளது.
இந்த அனல் காற்று குறித்து ஜப்பான அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷியிட் சுகா கூறும்போது, "தொடர்ந்து அனல்காற்று வீசி வருவதால்l பள்ளி மாணவர்களை பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள ஜப்பான் வானிலை மையம் இதனை இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது.