

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான வீடுகள், சுற்றுலா விடுதிகள், வாகனங்கள் இந்தத் காட்டு தீக்கு இரையாகியுள்ளன. சுமார் 715 பேர் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். கிரீஸ் நாட்டின் வரலாற்றில் மோசமான காட்டுத் தீயாக இது கருதப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் விருப்பப் பட்டியலில் தவறாமல் இடம்பெறும் கிரீஸ், காட்டுத் தீயினால் எத்தகைய பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்பதை விளக்குகிறது இந்தப் புகைப்படத் தொகுப்பு.