தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும் வடகொரியா: அமெரிக்கா குற்றச்சாட்டு

தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும் வடகொரியா: அமெரிக்கா குற்றச்சாட்டு
Updated on
1 min read

வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களைத் தொடர்ந்து தயாரித்துக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச நாடுகளுக்கான இருதரப்பு உறவு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் எழுந்த கேள்விக்கு  அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ கூறும்போது, ''ஆம். வடகொரியா இன்னும் தொடர்ந்து அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது'' என்றார்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் ட்ரம்ப்பும் கடந்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியாவும் அந்த நாட்டுக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. இது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கை உடனடியாகத் தொடங்கும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையே அணு ஆயுத அழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த விவகாரத்தில் அமெரிக்கா கூலிப்படைத் தலைவனைப் போலச் செயல்படுவதாக வடகொரியா குற்றம் சாட்டியது. மேலும் உயர்நிலைப் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் நிபந்தனைகள் பிரச்சினைக்குரியதாக உள்ளதாக வடகொரியா கூறியிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in