

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லையைத் தாண்டியதாகக் கூறி இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது.
“புதன்கிழமை எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியர் ஒருவரை கைது செய்துள்ளோம்” என அந்நாட்டு துணை ராணுவப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு விவரம் எதையும் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திய வீரரை கைது செய்தது உண்மைதான். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரை நல்ல முறையில் நடத்துகிறோம். இதுதொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தகவலை பரிமாறிக் கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரால் எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தெரியவந்தால் அவரை வெள்ளிக்கிழமை விடுவித்து விடுவோம்” என்றார். -ஏஎப்பி