

போர்ச்சுகலில், சுற்றுலா சென்ற போலாந்து தம்பதி, மலை முகடு மீது நின்று செல்ஃபீ எடுக்கும் ஆர்வத்தில் அங்கிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
போர்ச்சுகலின் லிஸ்பனில் உள்ள கேபா டீ ரோகா பகுதிக்கு சுற்றுலா சென்ற போலந்து தம்பதியினர், மலைப்பகுதியில் ஆர்வமாக தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மலைமுகடுக்கு சென்று இருவரும் சேர்ந்து செல்ஃபீ படம் எடுத்துக்கொள்ள நினைத்தனர். மலை முகடில் செல்ஃபீ எடுக்க முயன்றபோது அங்கிருந்து தவறி விழுந்து அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தம்பதியினர் இருவரும் தவறி விழும்போது, அவர்களின் 5 மற்றும் 6 வயதுடைய குழந்தைகள் இருவரும் அந்த பகுதியில் இருந்துள்ளனர். இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதும், போர்ச்சுகல் காவல்துறை அதிகாரிகள் தம்பதியினரின் உடல்களை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு, அவர்களின் உடல்களை திங்களன்று கண்டெடுத்தனர்.
முன்னதாக, இதே போன்று மெக்சிகோவில் செல்ஃபீ எடுக்கும் ஆர்வத்தில், தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுடுவது போன்று போஸ் கொடுத்து, எதிர்பாராத விதமாக சுட்டுக்கொண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.