முன்னாள் காதலனின் ரூ.5,900 கோடி மதிப்பு பிட்காயினை தவறுதலாக குப்பையில் தூக்கியெறிந்த இங்கிலாந்து பெண்

படம்: மெட்டா ஏஐ
படம்: மெட்டா ஏஐ
Updated on
1 min read

இங்கிலாந்து பெண் தனது முன்னாள் காதலனின் ரூ.5,900 கோடி பிட்காயினை தவறுதலாக குப்பைத் தொட்டியில் தூக்கியெறிந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இங்கிலாந்தின் நியூபோர்ட் நகரத்தை சேரந்தவர் ஹல்பினா எட்டி-இவான்ஸ். இவருடைய முன்னாள் காதலர் ஜேம்ஸ் ஹோவல்ஸ். ஹோவல்ஸ் கடந்த 2009-ம் ஆண்டு 8,000 பிட்காயின்களை வாங்கி வைத்துள்ளார். தற்போது அதன் மதிப்பு 569 மில்லியன் பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,900 கோடி. ஆனால், ஹோவல்ஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் பிட்காயின் வாங்கியதை மறந்துவிட்டார். இந்த நிலையில், வீடுகளை சுத்தப்படுத்தும்போது. அந்த பார்சூன் பிட்காயின் மற்றும் அதன் டிஜிட்டர் கீ விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிரைவ்வை அவருடைய முன்னாள் காதலி ஹல்பினா தவறுதலாக குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டார்.

தற்போது பிட்காயின் விலை லட்சக்கணக்கில் அதிகரித்து வருவதையடுத்து, ஹோவல்ஸுக்கு தான் பிட்காயின் வாங்கியது குறித்து ஞாபகம் வந்துள்ளது. ஆனால், தற்போது அவர் வாங்கிய பிட்காயின் தகவல் தொகுப்பு அடங்கிய ஹார்ட் டிரைவ் நியூபோர்ட் குப்பைக்கிடங்கில் ஒரு லட்சம் டன் கழிவுகளுக்கு கீழ் புதைந்துள்ளது.

இதுகுறித்து ஹோவல்ஸ் கூறுகையில், “ குப்பைக் கிடங்கில் எனது ஹார்ட் டிரைவ்வை தேட அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். பிட்காயின் மதிப்பு ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டுள்ளது. நிச்சயம் அந்த புதையல் எனக்கு திரும்ப கிடைக்கும் " என்றார்.

ஆனால், நியூபோர்ட் சிட்டி கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ அவ்வளவு குப்பைகளையும் தோண்டி ஹார்ட் டிரைவ்வை கண்டுபிடிப்பது சாத்தியமில்லாதது. அது, அப்பகுதியில் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.

இருப்பினும், சட்டப்போரட்டத்தின் மூலம் ஹார்ட் டிரைவ் திரும்ப கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஹோவல் அப்படி கிடைக்கும்பட்சத்தில் நியூபோர்ட் நகர மேம்பாட்டுக்கு 10 சதவீத தொகையை தானமாக அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in