வியட்நாம் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி

வியட்நாம் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி
Updated on
1 min read

வியட்நாம் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். பலர் காணமல் போகியுள்ளனர்.

இதுகுறித்து வியாட்னாம் போலீஸார் தரப்பில், "வியட்நாமில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையினால் உண்டான திடீர் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர். பலர் காணமல் போகியுள்ளனர். காணமால் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறும்போது, "வியட்நாமிலுள்ள ஹா கைங் மாகாணத்தில் வீடு இடிந்ததில் மூன்று பேர் பலியாகினர். மேலும் வெள்ளத்தில் 12 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவினால் வீடுகள் சேதமடைந்துள்ளது. பல கிராமங்கள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகள் நடந்து வருகிறது” என்றார்.

வியட்நாமில்  ஜூன் நவம்பர் மாதங்களில் கடுமையான மழை பொழிவு இருக்கும் என்பதால் மக்கள் போதிய பாதுகாப்புடன் இருக்குமாறு  அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in