ட்ரம்ப்பை கொல்ல முயற்சி: ஈரானுக்கு தொடர்பு?

ட்ரம்ப்பை கொல்ல முயற்சி: ஈரானுக்கு தொடர்பு?
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவரை கொலை செய்ய 2 முறை முயற்சி நடந்தது. எனினும் அவர் தப்பிவிட்டார்.

இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்காவில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ் தான் நாட்டைச் சேர்ந்த பர்ஹத் ஷகேரி (51), டொனால்டு டிரம்பைகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அதில் குற்றம் சாட்டப்பட் டுள்ளது. இதன் பின்னணியில் ஈரா னிய இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி) உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நியூயார்க் நகரில் வசித்து வரும் ஈரான் அரசு எதிர்ப்பாளரை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஷகேரி மற்றும் 2 பேர் பேர் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஷகேரி ஈரானில் வசிப்பது தெரியவந்துள்ளது.

டொனால்டு ட்ரம்ப்பை படுகொலை செய்யும் பொறுப்பை ஐஆர்ஜிசி அதிகாரி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் ஷகேரியிடம் ஒப்படைத்ததாக அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஷகேரி ஐஆர்சிஜி அதிகாரிகளை சந்தித்ததாகவும், 7 நாட்களில் ட்ரம்ப்பை கொலை செய்வதற்கான திட்டத்தை வழங்க வேண்டும் என அவரிடம் கேட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது நடக்காத பட்சத்தில் இந்த திட்டத்தை தேர்தல் முடியும் வரை தள்ளிப்போடுமாறும் அறிவுறுத்தி உள்ளனர். ஏனெனில், தேர்தலில் ட்ரம்ப் தோற்றுவிட்டால், அவரை கொலை செய்வது சுலபம் என ஐஆர்ஜிசி கருதியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in