இந்தியா வருகிறார் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே

இந்தியா வருகிறார் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே
Updated on
1 min read

இந்தியா - அமெரிக்க உறவை மேலும் வளர்த்துக் கொள்ள ஐ . நா வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இந்தியா வர இருக்கிறார்.

நிக்கி ஹாலேவின் இந்த வருகை, அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செல்லவுள்ள நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் பயணத்துக்கு முன் நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த இந்தியர்களுக்குப் பிறந்தவர் நிக்கி ஹாலே. இவர் தெற்கு கரோலினா மாகாணத்தின் முதல் பெண் கவர்னராக இருந்தவர்.

ஐ. நாவுக்கான அமெரிக்க தூதரானப் பிறகு நிக்கி ஹாலெ மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.

நிக்கி ஹாலேவின் இந்த இரண்டு நாள் (ஜூன் 26 -28)  பயணத்தில் இந்தியாவின் முக்கிய அரசு அதிகாரிகள், என்ஜிஓக்களை சந்தித்து ஆலோசிக்க இருக்கிறார் என்று தெரிவிட்டுள்ளது.

இது தவிர அவரது பயணம் பற்றி எந்தவொரு கூடுதல் தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நிக்கி ஹாலேவின் இந்தச் சந்திப்பு இந்தியா - அமெரிக்க உறவை கூடுதலாக பலமாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in