இராக்கில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி

இராக்கில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி
Updated on
1 min read

இராக் தலைநகர்  பாக்தாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 18  பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து இராக் அதிகாரிகள் தரப்பில், "பாக்தாத்தில் சதர் நகரில் நடந்த குண்டுவெடிப்பில்  18 பேர் பலியாகினர். அதில் 2 பேர் குழந்தைகள். இந்தக் குண்டு வெடிப்புகளில் 90 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துமவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிமருந்துகள் ஒரு மசூதியில் சேமித்து வைக்கப்பட்டு அதன் அருகே நிறுத்திவைக்கப்பட்ட காரில் பரிமாற்றம் செய்யும்போது வெடித்ததாக இராக் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தி இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம்  தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்த உள்ளதாக இராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in