Published : 06 Jun 2018 11:28 AM
Last Updated : 06 Jun 2018 11:28 AM

ஆட்டம் பாட்டத்துடன் அறுவை சிகிச்சை: அதிர்ச்சி வீடியோவால் சிக்கிய அமெரிக்க மருத்துவர்

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஆடிப்பாடி கொண்ட அறுவை சிகிச்சை செய்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் விண்டெல். அழகு சிகிச்சை நிபுணரான இவரிடம் ஏராளமான பெண்கள், தங்கள் தோல் பாதிப்பு மற்றும் முக அழகிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிளாஸ்டிக் சர்ஜரி எனப்படும் தோல் மாற்று அறுவை சிகிச்சையில் நிபுணரான இவர், ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். அவ்வாறு அறுவை சிகிச்சை செய்யும்போது, ஆபரேஷன் தியேட்டருக்குள் துள்ளல் இசை பாடல்களை போட்டு கேட்பது வழக்கம். மேலும் அவரும், அவரது உதவியாளர்களும் ஆபரேஷன் தியேட்டருக்குள் பாடல்களை கேட்டுக் கொண்டே, ஆடிபாடியுள்ளனர்.

நோயாளிகள் மயக்க நிலையில் உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இருந்ததுடன், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். இவ்வாறு ஆடிப் பாடிய வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளார்.

இந்த வீடியோக்கள் சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது, அவரிடம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் நோயாளிகள் பலர் இந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ டாக்டர் விண்டெலுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதை பார்த்த அவரது நோயாளிகள் பலரும் தங்களுக்கு அறுவை சிகிச்சையினால் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு மருத்துவரின் ஆடல், பாடல் அலட்சியமே காரணம் என புகார் கூறி வருகின்றனர். இதுபோல அடுத்தடுத்து பலர் குற்றம்சாட்டியுள்ளனர். சிலர் உள்ளூர் நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x