Published : 06 Aug 2014 02:35 PM
Last Updated : 06 Aug 2014 02:35 PM

மேற்கத்திய தூதர்கள் ஒருதலைபட்சமாக தமிழர்களை ஆதரிக்கின்றனர்: இலங்கை குற்றச்சாட்டு

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் உற்றார் உறவினர்களை இழந்த தமிழர்களை அமெரிக்க மற்றும் பிற நாட்டுத் தூதர்கள் இலங்கையில் சந்தித்தனர். இதனையடுத்து மேற்கத்திய தூதர்கள் எப்போதும் ஒருதலைபட்சமாக தமிழர்களையே ஆதரிக்கின்றனர். இதனால் பதற்றம் ஏற்படுகிறது என்று இலங்கை குற்றம் சாட்டியுள்ளது.

கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. இதனையடுத்து இலங்கை அரசு ஆதரவு பவுத்தத் துறவிகள் தலைமையில் தேவாலயத்திற்குள் கும்பல் ஒன்று நுழைந்து கூட்டத்தைக் கலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து இலங்கை வெளியுறவு அமைச்சகம், மேற்கத்திய தூதர்கள் நடுநிலை தவறுகின்றனர். பெரும்பான்மை சிங்களவர்களைப் புறக்கணித்து தமிழர்களை ஆதரிக்கின்றனர்.

இதனால் இருதரப்பினருக்கு இடையேயும் பதற்றமே அதிகரிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

உள்நாட்டு உணர்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அயல்நாட்டுத் தூதர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்று எச்சரித்துள்ளது.

அமெரிக்க தூதரகமோ தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த பவுத்தக் கும்பல் தமிழர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்கிறது என்று புகார் எழுப்பியுள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் அறிக்கை வெளியிட்டு இலங்கையின் போக்கைக் கண்டித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x