Published : 26 Jun 2018 12:32 PM
Last Updated : 26 Jun 2018 12:32 PM

”ஈரான் மாறியிருக்கிறது... ஆனால் நீங்கள் நினைக்கும் வழியில் அல்ல ட்ரம்ப்”

அணுஆயுத ஒப்பந்ததிலிருந்து அமெரிக்கா விலகியது முதல் ஈரான் நிறையவே மாறியிருக்கிறது ஆனால் ட்ரம்ப் நினைக்கும் வழியில் அல்ல என்று அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்செய்தியாளர் சந்திப்பில், "அமெரிக்கா ஈரானுடனான அணுஆயுத ஒப்பத்ததிலிருந்து வெளியேறியது முதல் ஈரான் தனது பிராந்தியத்தில் நிறையவே மாறியிருக்கிறது. அவர்கள் இனி சிரியாவில் என்ன நடக்கிறது, ஏமனில் என்ன நடக்கிறது என்று பார்க்கப்பட்டார்கள். கடந்த மூன்று மாதங்களில் ஈரான் நிறையவே மாறி இருக்கிறது”  என்று கூறியிருந்தார்.

ட்ரம்ப் கூறியது போல ஈரான் மாற்றமடைந்திருக்கிறாதா? என்று ஆய்வாளர்வர்கள் சமீபத்தில் ஆய்வில் ஈடுபட்டனர்.

அதில் ஈரானின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில்,

அமெரிக்கா அணுஆயுத ஒப்பத்திலிருந்து விலகியது முதல்,  அரசியல் முன்னேற்றம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிரியா வெளியுறவுத் துறை ஆலோசகர் கூறும்போது,”அணுஆயுத ஒப்பந்ததிலிருந்து அமெரிக்கா விலகியதால் சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் எங்களின் நடவடிக்கையை மாறியுள்ளது என்ற மாய பிம்பத்தில் ட்ரம்ப் இருக்கிறார். எங்கள் கொள்கைகள் ஏதும் மாறவில்லை” என்றார்.

ஈரான் மாறியிருக்கிறது... ஆனால் நீங்கள் நினைக்கும் வழியில் அல்ல ட்ரம்ப் என்று ஈரான் மக்களும் ட்ரம்புக்கு பதிலளித்துள்ளனர்.

எனினும் அணுஆயுத ஒப்பத்திலிருந்து அமெரிக்கா விலகியிருப்பது ஈரானில்  பெரும் பொருளாதரா இழப்பை வரும் காலங்களில் ஏற்படுத்து என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

அணுஆயுத ஒப்பந்ததிலிருந்து விலகிய அமெரிக்கா

முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

ட்ரம்ப்பின் இந்த விமர்சனத்துக்கு ஈரான் அதிபர் ஹசன் ரஹானியும் தக்க பதிலடி அளித்து வந்தார். அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகினால் அது அந்நாட்டின் வரலாற்று தவறாக அமையும் என்று அவர் எச்சரித்தார்.

இந்த நிலையில்  கடந்த மாதம் ஈரானுடன் செய்துக் கொண்ட அணுஆயுத ஒப்பந்தம்  ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x