சீனா மீது கடுமையான வரி விதிப்பு: ட்ரம்ப் ஒப்புதல்

சீனா மீது கடுமையான வரி விதிப்பு: ட்ரம்ப் ஒப்புதல்
Updated on
1 min read

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அமெரிக்க  ஊடகங்கள், "அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியாழக்கிழமை வர்த்தகம் தொடர்பான ஆலோசனையாளர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சீனாவின் மீது கடுமையான வரிகளை விதிக்கும் திட்டங்களுக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்திருக்கிறார்" என்று செய்தி வெளியிட்டுள்ளன.

விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 25 % சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் 2.5% வரி விதிக்கப்படுகிறது. இது நியாமான வர்த்தகம் அல்ல எனவே சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 50 பில்லியன் டாலர்வரை 4 லட்சம் கோடி ரூபாய்  அளவிற்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார்.

இந்த நிலையில் சீனா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த வரி வதிப்பு நடைமுறைக்கு வர இருப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா தங்கள்  நாட்டின் மீது அமெரிக்கா வர்த்தக வரியை அறிமுகப்படுத்த இருந்தால் அந்த நாட்டுடன் வர்த்தகம் தொடர்பான அனைத்து பேச்சு வார்த்தைகளும்  ரத்து செய்யப்படும் என்று சீனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in