தீவிரவாத தாக்குதலில் இஸ்ரேல் பெண் உயிரிழப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

டெல்அவிவ்: இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள பீர்சேபா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று ஒரு தீவிரவாதி திடீரென துப்பாக்கியால் நாலாபுறமும் சுட்டார். இதில் ஒரு பெண் உயிரிழந்தார். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து இஸ்ரேல் போலீஸார் கூறியதாவது: அடையாளம் தெரியாத தீவிரவாதி, பீர்சேபா பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் கத்தியால் தாக்குதல் நடத்தி உள்ளார்.

அந்த தீவிரவாதியை சுட்டுக் கொன்றுவிட்டோம். அவர் ஹமாஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவரா அல்லது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் பல்வேறு பகுதிகள் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதை கருத்தில் கொண்டு இஸ்ரேல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு இஸ்ரேல் போலீஸார் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in