கனமழை காரணமாக வெள்ளம் - நேபாளத்தில் 39 பேர் உயிரிழப்பு; பலர் மாயம்

நேபாளத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
நேபாளத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
Updated on
1 min read

காத்மாண்டு: நேபாளத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர், 11 பேரை காணவில்லை.

நேபாளத்தில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தலைநகர் காத்மாண்டுவில் 226 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இங்கு 9 பேரும், லலித்பூரில் 16 பேரும், பக்தாபூரில் 5 பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

மற்ற இடங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட் டன. இதுவரை நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. பலரை காணவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேபாளம்பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in