

நைஜீரியாவின் க்வோஸா நகரை கைப்பற்றிய போகோ ஹராம், அங்கு 'கலிபெத்' எனும் தனி நாடு அமைத்ததாக அறிவித்துள்ளது.
நைஜிரீயாவில் போகோ ஹாரம் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் அங்குள்ள பல கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி வந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக வடகிழக்கு, பகுதியில் உள்ள நகரங்களையும் கிராமங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போகோ ஹாரம் கிளர்ச்சியாளர்கள், தற்போது அந்த பகுதியை 'கலிபெத்' என்கிற இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.
இது குறித்த வீடியோப் பதிவு ஒன்றை அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் பேசும் போகோ ஹாரம் கிளர்ச்சிப் அமைப்பின் தலைவர் அபு பக்கர் ஷேக், "க்வோஸா நகரை வென்று தந்த அல்லாஹ்வுக்கு நன்றி. க்வோஸா தொடர்பாக நைஜீரியா இனி கவலையடைய தேவையில்லை" என்று கூறுவதாக வெளியிடப்பட்டுள்ளது.